பாரீஸ் 13 ம் வட்டாரத்தில் நேற்று பகல் 4ம் மாடியில் அமைந்திருந்த வீடொன்றில் ஏரிவாயு கொள்கலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு படையினரின் தகவலுக்கமைய பாரிஸில் உள்ள பத்திரிகை ஊடகம் ஒன்று குறித்த தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இவ்விபத்தில் இறந்தவர் 34 வயது மதிப்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் Boulevard Vincent என்ற முகவரி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் எந்த நாட்டவர் என்பதை பத்திரிகை அறியத் தரவில்லையாயினும் நம்பத்தகுந்த தகவல் மூலம் ஈழத் தமிழர் என்பதும் சென்மிஸல் பகுதியில் உணவகம் ஒன்றில் வேவை செய்பவர் எனவும் அறியமுடிகிறது.