ஆனால், இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. இது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் செடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இது மிகவும் பிரபலம். இது வீட்டை அலங்கரிக்க பயன்தரும் செடியாகும்.
இதை வளர்ப்பதற்கு பெரியதாய் எந்த ஒரு செலவும் ஆகாது.
ஒவ்வொரு இலையாக துளிர்விட்டு வளரும் பண்புடையது மணி பிளான்ட். இதயம் போன்ற வடிவில் வளரக் கூடியது மணி பிளான்ட்…
பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
செல்வம் பெருக காரணங்கள்:
தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்டை வைப்பதால், விநாயகர் தீயதை நீக்குகிறார் என்றும், சுக்கிரன் செல்வம் பெருக செய்கிறார் என்ற நம்பிக்கை நிலவிகிறது என வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வைக்கக் கூடாத திசை எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட்டை வடகிழக்கு திசையில் வைக்க கூடாது. ஏனெனில் இது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என கூறுகிறார்கள்.குருவின் ஆதிக்கம் வடகிழக்கு குருவின் திசையை பிரதிநிதித்துவம் செய்கிறது.
செல்வம் பெருகும் மணி பிளான்ட் :மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.