பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்! இன்றிலிருந்து கடுமையாக்கப்படும் சட்டம்

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

பிரான்சில் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கையை அறிவிப்பது குறித்து அதிபர் எமானுவேல் மக்ரோன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சில முடிவுகளை எடுத்துள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான வழிமுறையை அவர் தொலைக்காட்சியில் தோன்றி இன்று மக்களிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

பிரான்சின் இன்றைய நிலவரப்படி 8 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் சில பகுதிகளுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை பாரிஸ் பிராந்தியத்திலும், பிரான்சை சுற்றியுள்ள எட்டு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது நகரங்களும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் குறைந்தது நான்கு வாரங்களுக்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவுக்கு கடுமையாக்கப் பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 1 ஆம் திகதி வரை நீட்டிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரான்ஸ் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கி, பாரிஸ் பிராந்தியத்தின் பெரு நகரங்களிற்கும் நடைமுறைக்கு வருகின்றது.

ஒன்பது பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களிற்கு 135 € அபராதம் விதிக்கப்படும், அத்துடன் மேலும் குறத்த குற்றத்தை செய்தால் மீண்டும் இது 1,500 யூரோவாக உயரக்கூடும்.

ஊரடங்கு உத்தரவு பகுதிகளுக்குள், மக்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும், பொது போக்குவரத்து தொடர்ந்து இயங்கும்.

மற்றவர்களைப் பாதுகாக்கவும், முதியவர்களையும்,பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாக்கவும், சுகாதார சேவை மற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கவும் ,வைரஸ் பரவுவதை நாம் தடுக்க வேண்டும் என்று பிரான்சின் அதிபர் எமானுவேல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.