மற்ற ராசிக்காரர்களுக்கு குரு என்ன தர போகிறார், மேலும் இந்த குருப் பெயர்ச்சியில் கடுமையாக பாதிக்கப்படப் போகும் அந்த நான்கு ராசிக்காரர்கள் செல்லவேண்டிய கோயில்கள் குறித்து தெளிவாக காணலாம் வாருங்கள்.மேஷம், மிதுனம், கும்பம் கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு குரு அப்படித்தான் கொடுக்கப்போகிறார்.ஆனாலும், உங்கள் பலனை முழுமையாக அடைய சில கோயில்களுக்கு சென்றுவரவேண்டும்.
சென்னை அருகில் பாடியில் உள்ள, வலிதாயநாதர் கோயில் குருபகவான் வழிபட்ட தலமாகும். குருவுக்கு இங்கு சன்னதி உள்ளது. இவர் சிவனை வணங்கும்விதமாக மேற்கு நோக்கியிருப்பது சிறப்பான அமைப்பு. ராஜகுரு திட்டை திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குருபகவான் ராஜ குருவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும். லட்சார்ச்சனை குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், ஒரே சன்னதியில் குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர்.
குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார். இந்த தலம். மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்ற தலம் இதுவாகும். கடுமையாக பாதிக்கப்பட போகும் அந்த நான்கு ராசிகள் இந்த குருப் பெயர்ச்சியினால் அதிகம் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை.
குரு பார்வை இனி வரும் வருடங்களில் உங்கள் மேல் விழும். இந்த வருடத்துக்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் குரு பகவானிடம் சென்றுவருவதுதான். வாருங்கள் உங்களுக்கான கோயில்களையும் காணலாம். ரிஷிபம், சிம்மம் ,விருச்சிகம், மீனம் ஆகிய நான்கு ராசிக்காரர்களும் மிகவும் துரதிஷ்டமான செய்தி இது. இந்த வருடம் குரு உங்களுக்கு பெரிதாக எந்த மகிழ்ச்சியையும் தரப்போவதில்லை.
ஆனால், நம்புங்கள் கூடியவிரைவில் உங்கள் கவலைகள் நீங்கும். உடல் நலத்தைப் பேணுங்கள். குருவை நாடுங்கள். நவக்கிரக ஸ்தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.