தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும், வேலை செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பதும் ஒரு முக்கிய காரணமாகும்.
தொப்பையை குறைக்க நாள்தோறும் உடற்பயிற்சியும் செய்து வருவார்கள்.
இதற்காக அதிகாலை எழுந்து ஓடுவதையும், நடப்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
இவர்களுக்காக இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க அற்புதமான வழி இதோ!
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை – 5
- புதினா இலைகள் – 15
- வெள்ளரிக்காய் – 1
- துருவிய இஞ்சி – 2 ஸ்பூன்
- தண்ணீர் – 2.5 லிட்டர்
செய்முறை
வெள்ளரிக்காய் மற்றும் 2 எலுமிச்சையை எப்பவும் போல வட்டமாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
மீதியிருக்கும் 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் நறுக்கிய புதினா, 1.5 லிட்டர் நீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.
அதன் பின் அதில், இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெட்டி வைத்த வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சையை போட்டு நன்றாக கிளறி, ஒரு நாள் முழுவதும் ஊற வைத்தால், தொப்பையை குறைக்கும் ஜூஸ் தயார்.
இந்த ஜூஸை ஒவ்வொரு நாளும் செய்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால் தொப்பை குறைவதைக் காணலாம்.
நன்மைகள்
எலுமிச்சையில் பெக்டின் எனும் நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துவதுடன் உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றுகிறது.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது. கலோரிகள் குறைவு என்பதால் இது உடலின் அல்கலைன் அளவை சீராக்கி, வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.
புதினா: உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
இஞ்சி: கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கிறது.
தண்ணீர் உடலின் நார்ச்சத்தை அதிகரிப்பதோடு உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கிறது.
தொப்பை அதிகமாக இருப்பவர்கள் இந்த ஜூஸை தினமும் உடற்பயிற்சியுடன் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வரும்.