உண்ணும் உணவில் அதிக அளவில் கொழுப்புகள் இருந்தால் அது நம் உடலில் சேர்ந்து கொள்ளும். சிறிது சிறிதாக சேர தொடங்கி பின்னாளில், வயிறு உப்பி “தொப்பை” என்ற ஒன்றை பெற்று தரும்.
இது ஆண்கள் பெண்கள் என தனி தனி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருவருக்கும் பொதுவான பாதிப்பையே தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பண்டைய காலத்தில் தமிழ் மக்கள் நோய் நொடியின்றி இருந்ததற்கு சில முக்கிய காரணிகள் இருக்கிறது. சீரான உணவு பழக்கம், உடற்பயிற்சி, சித்த வைத்திய முறைகள், ஆசனங்கள் போன்றவை அவர்களுக்கு பெரிதும் உதவியது.
இது தமிழ் சித்தர்களால் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வந்ததாம். ஒரே நாளில் நல்ல மாற்றத்தினை உணர முடியும்.
எலுமிச்சை
ஆரோக்கியமான உடல் நிலையை தருவதில் எலுமிச்சைக்கு பெரிய பங்கு உள்ளது. தினமும் காலையில் உங்கள் நன்னாளை இந்த எலுமிச்சை சாறுடன் தொடங்குங்கள். மிதமான சுடு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து, 2 சிட்டிகை உப்பையும் சேர்த்து குடித்து வந்தால் அடி வயிற்றில் உள்ள கொழுப்புகள் விரைவில் குறைந்து விடும்.
வெந்தயம்
உடல் கச்சிதமாக வைத்து கொள்ள இந்த வெந்தயம் சிறந்த முறையில் உதவுகிறது. Galactomannan என்ற முக்கிய கொழுப்பை கரைக்க கூடிய மூல பொருள் இதில் உள்ளது. தினமும் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து நீரில் கலந்து குடித்து வந்தால் கொழுப்புகள் உடனடியாக கரைந்து நல்ல பலனை தரும்.
இஞ்சி
நம் வீட்டிலே உள்ள பொருட்களில் முதன்மையான மூலிகையாக இந்த இஞ்சி கருதப்படுகிறது. இதில் உள்ள Gingerols என்ற மூல பொருள் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி, உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி விடும். எனவே, தினமும் இஞ்சியை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது டீ போன்று குடித்து வாருங்கள்.
முருங்கை
முருங்கை பல நோய்களுக்கு அருமையான மருந்தாக உள்ளது. இதனை டீ போன்று குடித்து வந்தால் உடல் எடை கச்சிதமாக மாறும். மேலும், சீரான உடல் நலத்தையும், ரத்த ஓட்டத்தையும் முருங்கை டீ தரும். அடி வயிற்று கொழுப்புக்களை இந்த டீ ஒரு சில வாரத்திலே குறைத்து விடுமாம்.