உத்திரபிரதேச மாநிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் தலையில்லாமல் குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் குப்பைக்கொட்டும் இடம் உள்ளது,அங்கே நாய்கள் ஒரு கவரை கிழித்துக்கொண்டிருந்தது அப்போது அந்த பையில் இருந்து மனித உடல் பாகங்கள் வெளியே வந்தது இதனை அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்த்துவிட்டு தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
அதன் பிறகு அங்கு மக்கள் சென்று பார்த்தபோது துர்நாற்றம் வீசிய நிலையில் அந்த பையில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தன,அங்கு விரைந்து சென்ற போலீசார் தலை வெட்டப்பட்ட நிலையில் இருந்த பெண்ணின் உடலை கண்டெடுத்தனர்,மேலும் அந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
கொலை செய்தவர்கள் அந்த பெண்ணை அடையாளம் கண்டறியக்கூடாது என்பதற்காகவே பெண்ணின் தலையைவெட்டி உடல் பாகங்களை சாக்குப்பையில் சுற்றி குப்பைக்கிடங்கில் வீசியுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சட்டரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என போலீஸார் தெரிவித்தனர்.