85 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட சுவிட்சர்லாந்தில் ஒரு இலட்சத்து 21ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரனா தொற்றியிருக்கிறது, 80பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருக்கிறது என மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது முகநுால் பதிவில் கறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நாள் ஒன்றிற்கு சராசரியாக 6500பேர் கொரனா தொற்றாளர் என அடையாளம் காணப்படுகின்றனர். 2111பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். தினசரி சராசரியாக 30பேர் மரணமடைகின்றனர்.
இந்நிலையில் தமிழர்கள் சாமத்திய கொண்டாட்டங்கள் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என கொரனாவை பரப்புவதில் வெற்றிகரமாக செயற்பட்டு கொண்டிருக்கின்றனர்.
ஜேர்மனியில் சாமத்திய கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்களில் 95பேருக்கு கொரனா தொற்றியது. சுவிட்சர்லாந்திலும் சாமத்திய கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 22 பேருக்கு கொரனா தொற்றியிருக்கிறது. சூரிச் நகரில் அண்மையில் 50ஆவது பிறந்த நாளை 6 மாதத்தின் பின் கோலாகலமாக கொண்டாடிய வீரத்தமிழர்களில் 16பேருக்கு கொரனா தொற்றியிருக்கிறது.
முக்கிய குறிப்பு.
கட்டினால் வெளிநாட்டு மாப்பிளையைத்தான் கட்டுவன் என காத்திருப்பவர்களுக்கும் குறிப்பாக சுவிஸ் மாப்பிளை என்ற கனவோடு இருப்பவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இம் முகநுால் பதிவிற்கு கருத்து வழங்கியுள்ள ஒருவர்,
இலங்கை வாழ் சுவிஸ் தமிழர்கள் திருந்தத் தொடங்கிவிட்டனர் தம்பி!
உதாரணம்:
கடந்த கிழமை செங்காளன் மானிலத்தில் தனது 60தாவது பிறந்த நாளை கொண்டாட 600பேருக்கு அழைப்பு விடுத்து கொண்டாட்ட நிகழ்வு விமர்சியாக ஏற்பாடுசெய்யப்பட்டு 600பேருக்கான உணவு தடபுடலாக்கப்பட்டிருந்தது.
விழாவிற்கு வந்தோர்கள் 150தையும் தாண்டவில்லை, சமைத்து பகிரவிருந்த 600பேருக்கான உணவில் 400பேருக்கான உணவு கழிவு பையில் போட்டு அதற்கும் முத்திரை வரிகட்டி வீசப்பட்டுள்ளது.
இப்போது சொல்லுங்கள், இலங்கைத்தமிழர்கள் சுவிச்சர்லாந்து நாட்டில் கொரோனாவுக்கு கட்டுப்பட்டுவிட்டார்கள்.
பாவம் என்னெவென்றால் வங்கியில் எடுத்த கடன் 2000/ரூபாயும் கட்டி முடிக்க ஆறு வருடம் தேவைப்படும், வாழ்த்துக்கள் 60வது பிறந்த நாளுக்கு..
என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.