பிரசவத்திற்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்… கதறிய பெற்றோர்கள்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே இந்திரா நகரை சேர்ந்த தம்பதி நாகராஜ் – சுஷ்மிதா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுஷ்மிதா 5 மாத கர்ப்பமாக இருந்தார்.

அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்ப்பட்டதை தனது வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். பிரசவம் ஆகும் வரை இது போன்று இருக்க தான் செய்யும் என அனைவரும் சுஷ்மிதாவை சமாதானம் செய்துள்ளனர்.

இதனால் பிரசவ வலி அதிகமாக இருக்குமோ என்ற பயம் சுஷ்மிதாவிற்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தாயார் வீட்டிற்கு சென்ற சுஷ்மிதா பயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவ வலிக்கு பயந்து இளம்பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.