கழுத்து மட்டும் ஓவர் கருப்பா அசிங்கமா இருக்கா? இந்த மூன்றே பொருள் போதும்…. அதிசயம் நடக்கும்!

முகத்தைப் பராமரித்து அழகாக வைத்துக் கொள்ளும் நாம் கழுத்துப் பகுதியை, குறிப்பாக கழுத்தின் பின்பகுதியைப் பற்றி அக்கறை கொள்வதே கிடையாது.

குளிக்கும்போதும் நாம் பெரிதாகக் கண்டுகொள்ளாத பகுதியென்றால் காதும் பின்பக்க கழுத்தும் தான்.

அதைப் போக்க சில எளிய வழிகள் உண்டு. அவை குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது. அது சருமத்தை மிருதுவாகவும் புத்துணர்ச்சியோடும் வைத்திருக்க உதவும். அதோடு இது ஒரு சிறந்த பிளீச்சிங் ஏஜெண்ட்டாகவும் கூட செயல்படுகிறது. அதோடு சருமத்தினுடைய நிறத்தை மேம்படுத்தி கருமையைக் குறைக்கும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. என்சைமை தூண்டி சருமத்தில் இருக்கும் மாசு, மருக்களை நீக்க உதவும். இது சருமத்தை நீரோட்டமாக வைத்துக் கொண்டு ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றை சருமத்துக்குக் கொடுக்கிறது.

எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாறு ஏராளமான பிரச்னைகளுக்குத் தீர்வாக அமைகிறது. அதிலும் குறிப்பாக, சருமப்பராமரிப்பில் எலுமிச்சையின் பயன்பாடு மிக அதிகம். கழுத்தின் கருமையைப் போக்குவதிலும் எலுமிச்சைச்சாறு அதிவேகமாகச் செயல்படுகிறது.

எலுமிச்சை சாறுடன் சமஅளவு ரோஸ்வாட்டரை எடுத்துக் கொண்டு கலந்து, இந்த கலவையைக் பின்பக்க கழுத்தில் அப்ளை செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பாக, இந்த சீரமை அப்ளை செய்துவிட்டுப் படுத்து, அடுத்த நாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் வரையிலும் இதைச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.