செல்போனை பிடிக்கப்போய் தன் உயிரைப் பறிகொடுத்த இளம்பெண்

சென்னையில் கை தவறி கீழே விழுந்த செல்போனை பிடிப்பதற்காக தாவி கீழே விழுந்த பெண் பரிதாபமாக பலியானார்.

சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் தான் யாமினி, இவர் கடந்த 25ம் தேதி தனது வீட்டின் மடியின் ஓரமாக நின்றுகொண்டு போன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது கையில் இருந்த மொபைல் தவறி கீழ விழுந்தது, அதனை யாமினி பிடிக்க முயன்றபோது 4வது மடியில் இருந்து கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் யாமினியை அவரது குடும்பத்தினரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் யாமினி கால் இடறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வீட்டில் திருமண பேச்சு எடுத்து பிடிக்காமல் மடியில் இருந்து குதித்தாரா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.