பரபரப்பு நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்..வெல்லப் போவது யார்?.. பிரபல ஜோதிடரின் கணிப்பு சொல்வது என்ன?

நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

நவம்பர் 3-ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.

இரு வேட்பாளர்களுமே அமெரிக்க வாக்காளர்களை கவர தேர்தல் பிரசாரத்தில் அனலை கக்கும் அளவுக்கு செயல்படுகிறார்கள். இந்த தேர்தலில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இந்த தேர்தல் முடிவுகளை உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. டிரம்புக்கும், ஜோ பிடனுக்கும் செல்லும் இடங்களில் ஆதரவு பெருகுகிறது. இதனால் அதிபர் வேட்பாளர் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து உலக அளவில் பெரும் விவாதங்களும் பல கோடி ரூபாய் அளவில் சூதாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

9 லட்சம் வாக்குகள் இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அதிகபட்சமாக 9 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெறுவார் என இந்தியாவின் பிரபல ஜோதிடர் சங்கர் சரண் திரிபாதி கணித்துள்ளார்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்க அதிபரின் ஜாதகத்தை ஆய்வு செய்துள்ளார்.சாதகமான சூழல் இதில் அனைத்து கிரகங்களும் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றாலும் அவர் வாக்குகளில் மோசடி செய்துதான் வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்றும் ஜோதிடர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

செய்தித் தொடர்பாளர் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் ஜோதிட ஆலோசகராக இருந்த சங்கர் சரண் திரிபாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருந்தவர் ஆவார்.

இந்த தேர்தலில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு ஜோ பிடன் இருக்கும் நிலையில், டிரம்ப் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.