அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடபெற்று முடித்த நிலையில் வாக்குள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் அமெரிக்க தேர்தல் நிலையங்களில், பல ஆயிரக்கணக்கான இடங்களில், தமிழிலும் வழிகாட்டி பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
சீன மொழியான மண்டலின் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளோடு தமிழிலும் வழிகாட்டி பதாதைகள் பல மாநிலங்களில் வைக்கப்பட்டிருப்பதை காண பெருமகிழ்ச்சியாக இருந்ததாக பலரும் கூறிவருகின்றனர்.
இதேவேளை நம் தாய் நாட்டில் விமான நிலையத்தில் கூட அண்மையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வேற்று மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆங்கிலேயர்கள் அதிகமாக வாழும் ஆங்கிலேய நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைக்கப்பெற்ற கௌரவம் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.