அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு பக்கம் வளர்ந்தாலும் மறுபக்கம் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.
தற்போதுள்ள கால கட்டத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என நினைத்து நமது பழக்கவழக்கங்கள் பலவற்றை மாற்றியுள்ளோம்.
அதில் ஒன்று, இரவில் உறங்குவதற்கு கட்டில், பஞ்சு மெத்தை, பஞ்சு தலையணை என உபயோகிக்கிறோம். நமக்கு நோய்கள் அதிகரிக்க அதுவும் ஒரு காரணம் என்றே சொல்லலாம். கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் நோய்கள் குறையும்.
ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மை.
இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
பாயில் படுத்து தூங்கினால் வரும் நன்மைகள்
- உடல் சூடு தணியும், உடல் சோர்வு, மந்தம், ஜுரம் போகும்.
- கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு வலி வராது.
- பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுழுக்கு பிடிக்காது, குழந்தையின் முதுகெலும்பபை சீர்படுத்த உதவும்.
- பெரும்பாலான முதியோர்கள் தரையில் பாய் விரித்து உறங்குவதே நல்லது. ஏனென்றால் 60 வயதிற்கு மேல் உடலில் இரத்த ஓட்ட பிரச்சினை இருக்கும், பாயில் சமமாக கால் கையை நீட்டி மல்லாக்க படுக்கையில் உடல் எங்கும் இரத்தம் சீராக பாய்ந்து உடலில் உள்ள கொழுப்பை குறையும்.
- மூட்டு, முதுகு, தசை சம்பந்தமான பிரச்னைகள் குறையும்.
- வெயில் காலத்தில் நெகிழிப் பாய்களில் (பிளாஸ்டிக்) உறங்கினால், நம் தோலும் நெகிழும் அளவுக்கு அவை கொதித்து பல்வேறு தீமைகளை நமது உடலுக்கு இழைக்கும்.
- தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது, இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. இதனால் நம் உடலின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
- ஞாபக சக்தியைப் பெருக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்ட நாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.