பெண்கள் எப்போதுமே தலைசீவி பொட்டு வைத்து பூ வைத்து நகைகள் அணிந்து மங்களகரமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
பெரியவர்கள் சொல்வது அழகுக்காக மட்டுமல்ல அதில் ஆரோக்கியமும் இருக்கிறது. திருமணமான பெண்கள் தாலி அணிவதும் கால்களில் மெட்டி, கொலுசு போடுவதும், மூக்குத்தி அணிவதும் ஆரோக்கியத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது.
பெண்களின் பொட்டு வைத்த முகத்திற்கு தனி களை வரும். திருமணமான பெண்கள் மட்டுமல்ல சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பொட்டு வைக்க வேண்டும்.
பொட்டு வைத்த முகத்திற்கு கூடும் யாராலும் மெஸ்மரிசம் செய்ய முடியாது. பொட்டு வைத்த முகத்திற்கு அழகு கூடுவதோடு பாதுகாப்பும் அதிகமாகும்.
தாலி கயிறு மாற்றுவதற்கு சில மரபுகள் உண்டு. பழைய தாலி அழுக்காக இருந்தாலோ நீண்ட நாட்கள் ஆகிவிட்டாலோ புதிதாக மாற்றுவார்கள். தாலியை மாற்றுவதற்கும் சில மரபுகள் உள்ளது. திருமண பந்தத்தின் அடையாளமாக திகழும் திருமாங்கல்யத்தை 16 திரிகளை கொண்ட கயிற்றில் அணிவது மரபு.
தாலி மாற்றுவது எப்படி
திருமாங்கல்ய தாலி கயிற்றை பிரம்மமுகூர்த்தமான அதிகாலை வேளையில் மாற்றுவது நல்லது. பெண்கள் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து, பூஜை அறையில் விளக்கேற்றி, கிழக்கு திசை நோக்கி அமர்ந்து, கழுத்தில் உள்ள பழைய தாலிக்கயிற்றை கழட்டாமல், முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து,
அதில் உள்ள குண்டுகளை மட்டும் எடுத்து, புது தாலி கயிற்றில் கோர்த்து, அதனை கழுத்தில் போட்ட பின்பு தான், பழைய கயிற்றை கழுத்திலிருந்து எடுக்க வேண்டும். கழட்டிய பழைய கயிற்றை உங்கள் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளிலோ அல்லது கடலிலோ விட்டு விட வேண்டும்.
ஆரோக்கியம் தரும் ஆபரணங்கள்
ஒரு பெண் திருமணமானவர் என்பதை உணர்த்துவது அவர் கால் விரல்களில் அணிந்திருக்கும் மெட்டிதான். நெற்றி உச்சி வகிட்டில் பொட்டு வைத்திருப்பார்.
கழுத்தில் மாங்கல்யம், கால்களில் மெட்டி அணிவது கூட அடையாளம் என்பதை விட ஆரோக்கியம் உள்ளது என்பதை உணர்ந்துதான் அதை அணியச் சொல்கின்றனர்.
கொலுசு அணிவதன் முக்கியம்
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். உடம்பில் உள்ள பாலியல் ஹார்மோன்கள் தூண்டும். கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.
உடல் நலத்திற்கு நல்லது
கர்ப்ப காலத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது. கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
எனவேதான் திருமணமான பெண்கள பெண்கள் காலில் மெட்டி அணிவது நல்லது என்று முன்னோர்களும் வீட்டில் உள்ள பெரியவர்களும் கூறுகின்றனர்.
மூக்குத்தி போடுவது
பெண்கள் மூக்குத்தி அணியும்போது அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண் டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.
மனைவிக்கு கொலுசு, மெட்டி, மூக்குத்தி எல்லாம் போட்டு அழகுபடுத்துங்க வீடு அம்மணி அழகோடும் ஆரோக்கியத்தோடும் இருந்தால் நீங்களும் ஆரோக்கியமாக இருப்பீங்கதானே.