லண்டன் கடையொன்றில் உயிரிழந்த தமிழ் இளைஞர்

லண்டன் ஹவுன்சிலோவில் தமிழ் இளைஞர் ஒருவர், குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் பிரபல தமிழ் உண்வகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ள நிலையில், லண்டன் கொரோனா நிலவரம் காரணமாக மிகுந்த மன மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் கடை உரிமையாளர் குறித்த நபரை மிகவும் கவனமாக அவரை பாதுகாத்து வந்ததோடு. மருத்துவ ஆலோசனைகளை பெறவும் உதவி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் உணவை வாங்கி வர என்று அவர் புறப்பட்டு சென்ற இடைவெளியை பயன்படுத்தி அந்த இளைஞர் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறபப்டுகின்றது.

இதேவேளை உயிரிழந்தவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.