உலகில் மிக கொடிய நோயான புற்று நோயை மிக விரைவாக குணமாக்கும் அரிய மருந்து ஒன்று குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து. இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.
இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.இந்த மருந்தை உபயோகித்த பின்னர் சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.
பின்னர் 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிக்கள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாகக் காட்சியளிக்கிறது.இதுகுறித்து பேசிய “QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார்.
மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.