லண்டனில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக இருந்த பல்கலைக்கழக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சியான காணொளிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி யாழ் வம்சாவையை சேர்ந்த மதுஜா லண்டனில் திடீரென உயிரிழந்தமை புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.
குறித்த மாணவி சிறுவயது முதலே சுட்டித்தனமுடன் பள்ளிப்பருவம் முதல் கல்லூரி செல்லும் வரை கல்வியில் மட்டுமன்றி , கலைகள் பலவற்றிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர் ஆவார்.
அது மட்டுமா? புலம் பெயர் தேசங்களில் வாழும் நம்மவர் பலர் எமது தாய்மொழியினை தம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க தயக்கம் காட்டிவரும் நிலையில், எமது தாய்மொழியான தமிழ்மொழியினை ஆர்வமுடன் கற்றது மட்டுமல்லாது, எமது சமயத்தையும் அழகாக கடைப்பிடித்ததுடன், சமயம், தேவாராம் திருக்குறள் என்பவற்றையும் ஆர்வமுடன் கற்று பல போட்டிகளிலும் கலந்து கொண்டதுடன் அதில் பல பரிசில்களையும் மதுஜா பெற்றுள்ளார்.
அதோடு நின்றுவிடாமல் எமது கலாச்சார விழுமியங்கள்பால் ஈர்க்கப்பட்டு நாடகம், சங்கீதம் , பரதநாட்டியம், மற்றும் மேலத்தேய நடனம் என்பவற்றினையும் கற்று சிறந்ததொரு மாணவியார் விளங்கினார்.
அத்துடன் எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டுமென இயல்பாக எண்ணம் கொண்ட மதுஜா அது தொடர்பில் தனது தந்தையிடமும் கூறிவந்துள்ளார். தன்னலமற்ற அந்த குணம் பிறர்க்கு உதவவேண்டும் என வெளிப்பாடாய் அமைந்திருந்தது.
உலகம் முழுவதும் போற்றும் உயர் பதவிக்கு சென்று எல்லோரிற்கும் உதவிட வேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டு வளர்ந்த வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட அம்மாணவியின் மறைவானது அவரது குடும்பத்தவருக்கு மட்டுமன்றி நம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.