சர்க்கரை நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து குறிக்கோள்கள் ஆரோக்கியமான நபர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஒரு நபருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை மாற்ற வேண்டும்.
அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஆரோக்கியமான உணவு முறையை ஊக்குவிக்க, நீரிழிவு நோயாளிகள் அவர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும்.
புதிய ஆராய்ச்சி நான்கு பழங்கள் சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் எனக்கூறுகிறது. இது நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எல்லா காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பழங்கள் என்று வரும்போது அவை எல்லாமே இனிப்பு வகைகளாக இருப்பதால் எதனை சாப்பிடுவது என பலரும் குழம்புவதுண்டு.
சர்க்கரை நோயாளிகள் சில பழங்களை தவிர்ப்பது அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல சில வகை பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பது ஆச்சரியமான தகவல்.
சாப்பிடக்கூடாத பழங்கள்
நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதையும் அளவு அதிகரிப்பதையும் நிர்வகிப்பதற்கும் உணவு முக்கிய காரணி. ஒழுங்குபடுத்தப்பட்ட உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிக அவசியமான ஒன்று.
எடை இழப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் மாம்பழம், அன்னாசி, முலாம்பழம் மற்றும் வாழைப்பழங்கள். இந்த நான்கு பழங்களில் சர்க்கரை அதிகளவு நிறைந்துள்ளது.
நீங்கள் உண்ணக்கூடிய பழங்கள்
நான்கு பழங்கள் தடைசெய்யப்பட்டாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான மற்றும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பழங்களும் இங்கு உள்ளன.
- செர்ரி
- பீச்
- பாதாமி
- ஆப்பிள்
- ஆரஞ்சு
- பேரீச்சம்பழம்
- கிவி