முகப்பரு பிரச்சினையா?.. வாழைப்பழத்தோலை தினமும் இப்படி பயன்படுத்துங்கள்

வாழைப்பழமானது பல உடல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்ய பயன்படுகிறது. அப்படி பால், வாழைப்பழத் தோல் இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து நீரில் கழுவினால், முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தரும்.

மேலும், வாழைப்பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

அதன் பின்னர், பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.

பிறகு வாழை பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

பால், வாழை பழத்தோல் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும்.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.