குளிர் காலத்திலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க.. இந்த பழங்களை எடுத்துகொள்ளுங்கள்

சர்க்கரை நோயாளிகள் எப்போதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். பருவ மாற்றத்தில் வரகூடிய குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவு உயரக்கூடும்.

மேலும், சர்க்கரை நோயாளிகள் குளிர்காலங்களில் இயற்கையாகவே சர்க்கரை அளவை நிர்வகிக்க நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்க்கலாம்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு வைட்டமின் சி சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும்.

ஆரஞ்சு நார்ச்சத்து நிறைந்த பழம். இது உடலில் ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை போன்ற வளர்சிதை மாற்றங்கள் மாறுபாட்டை தடுக்க செய்கிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது

கிவி

பச்சை நிற இந்த பழம் ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது.

இது நார்ச்சத்துகளால் நிரம்பிய பழம். வைட்டமின் சி கொண்டவை. சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதால் இது வீக்கத்தை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதை சாலட் ஆகவோ மற்ற பழங்களுடனோ கலந்து சாப்பிடலாம்.

ஆப்பிள்

எல்லா காலங்களிலும் சாப்பிடவேண்டிய பழங்களில் ஆப்பிளும் ஒன்று. ஆப்பிளில் இருக்கும் ஆண்டோ சயினின் என்னும் சிறப்பு வாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் ரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.

உடலின் வளர்சிதை மாற்ற நிலையை சமநிலையை மேம்படுத்தவும் செய்கிறது. அளவாக எடுத்துகொள்வது நல்லது. ஆப்பிளை அப்படியே சாப்பிட வேண்டும் சாறாக்கி குடிக்க கூடாது.

ஏனெனில் ஆப்பிளில் கார்ப்ஸ் இருப்பதால் அதையும் நீரிழிவுக்கான டயர் ட் ஃபுட்டில் சேர்க்க வேண்டும். அதே நேரம் ஆப்பிள் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவை கண்காணிப்பதன் மூலம் இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை எவ்வளவு பாதிக்கிறது என்பதை அறிய முடியும்.

கொய்யா

கொய்யாவும் குறைந்த கிளைசெமிக் குறியிடு கொண்ட பழம். இது நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள பழம். இது பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த சிறந்த பழம்.

குளிர்காலங்களில் கொய்யா சேர்ப்பது குளுமையை உண்டாக்கும் என்று நினைப்பதுண்டு ஆனால் கொய்யா குளிர்காலத்துக்கேற்ற சிறந்த பழம்.

இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் குளிர்காலத்தில் கொய்யாவையும் சேர்ப்பது நன்மை தரும்.

திராட்சை

இதை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை உயர்ந்துவிடும் என்னும் தவறான நம்பிக்கை பலரிடம் உள்ளது.

திராட்சை குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டவை. இது ரத்த சரக்கரை அளவை உடனடியாக உயர்த்தாது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்ல பழம்.

அதிலும் ஊதா நிற திராட்சைக்கு நிறம் கொடுக்கும் பாலிஃபினால்கள் டைப் 2 நீரிழிவுக்கு நல்லது.திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் எனப்படும் பைட்டோ கெமிக்கலின்சுலின் சுரப்பை மேம்படுத்தும் தன்மை கொண்டது.