எலுமிச்சை கலந்த நீர் குடித்தால் உடம்பில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

பழங்காலம் முதலே பல மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்த எலுமிச்சை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் எண்ணற்ற பயன்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.

எலுமிச்சை வைட்டமி சி, வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் , இது நார்ச்சத்து மற்றும் பைடோ நியூட்ரியண்ட்ஸ் கொண்டுள்ளது. இது ஆரோக்கியத்துக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் துணைபுரிகிறது.

அதிலும் தினமும் காலையில் டீ, காஃபிக்கு பதிலாக எலுமிச்சை நீரோடுதான் நாளை தொடங்குவதனால் இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.

அந்தவகையில் எலுமிச்சை நீர் உடலுக்குள் என்ன விதமான மாற்றங்களை உண்டாக்குகிறது என்று பார்க்கலாம்.

எலுமிச்சை நீர் தயாரிப்பு
எலுமிச்சையை நறுக்கி பாதி பழத்தை 8 அவுன்ஸ் நீரில் வெந்நீர் அல்லது குளிர்ந்த நீரில் பிழிந்து தேவையெனில் வடிகட்டி கொள்ளவும்.

உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சுவை தேவையெனில் புதினா இலை, இலவங்கப்பட்டை ஒன்று, மஞ்சள் தூள் சிட்டிகை, இதனோடு வெள்ளரி துண்டுகள் மேலும் சிட்ரஸ் நிறைந்த பழத்துண்டுகளை சேர்த்து குடிக்கலாம். வெறுமனே எலுமிச்சை பிழிந்து குடித்தாலே சுவை நன்றாக இருக்கும்.

நன்மைகள்

  • உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள எலுமிச்சை சேர்த்த நீரை பருகலாம். ஏனெனில் எலுமிச்சை நீர் தண்ணீரின் சுவையை அதிகரிக்க செய்கிறது.

    மிதமான சாறு கலந்த நீர் உங்களை அதிகமாகவே குடிக்க தூண்டுகிறது. இதை பருகும் போது நீங்களே உணர்வீர்கள்.

  • சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது உணவு உட்கொள்ளும் கலோரி அளவை குறைக்கின்றது. ஏனெனில் இது பசி உணர்வு குறைந்து வயிறு நிறைந்த உணர்வு உண்டாகும்.

    எலுமிச்சை நீர் நீரிழைப்பையும் தடுப்பதா இது எடை குறைப்பில் சிறப்பாக கைகொடுக்கும்.

  • எலுமிச்சை நீர் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த மூலம் என்பதால் இது நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டுக்கு முக்கியமானது.

    இதில் உள்ள வைட்டமின் சி ஜலதோஷத்தின் காலத்தில் சிறிது குறைக்க செய்யும் .ஏனெனில் இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதோடு உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடவும் செய்கிறது.

  • உணவுக்கு பிறகு ஒரு டம்ளர் எலுமிச்சைநீர் குடிப்பது வாய் துர்நாற்றத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாய் துர்நாற்றம் இருப்பவர்கள் தொடர்ந்து எலுமிச்சை நீர் குடித்துவந்தால் துர்நாற்றம் நீங்கும்.
  • எலுமிச்சை சேர்த்த நீர் அமிலத்தன்மை கொண்டிருப்பதால் இது பற்களை சிதைக்கவும் வாய்ப்புண்டு. பற்களின் நிறம் மாறி அதிக உணர்திறன் கொண்டதாக பற்கூச்சம் போன்றவற்றையும் கொள்ளலாம்.

    எனினும் மிதமான அளவு சேர்த்த நீரை பற்கள் படாமல் உறிஞ்சு குடிப்பது பாதுகாப்பானது. எலுமிச்சை நீர் குடித்ததும் வாயை கொப்புளிப்பதன் மூலம் அமிலம் பற்களில் படியாமல் காக்கலாம்.

  • எலுமிச்சை நீர் குடிப்பது நாள் முழுவதும் ஆரோக்கியமாக புத்துணர்ச்சியாக உலாவர இது உதவுகிறது.
  • எலுமிச்சை நீர் சிறுநீரக கற்களை தடுக்கும். சிறுநீர் கற்களை தடுக்க செய்யும். சிறிய கற்களை உடைக்க கூடும் அல்லது வெளியேற்றவோ உதவும்.

    ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் சிட்ரேட் சிறுநீரை குறைந்த அமிலமாக்கி வெளியேற்றுகிறது.

  • எலுமிச்சையில் இருக்கும் புளிப்பு சுவை உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. உணவில் இருக்கும் நச்சுகள் உடலில் தேங்காமல் வெளியேற்றவும் உதவுகிறது.
  • காலையில் ஒரு டம்ளர் நீர் குடித்தாலே போதும் உங்கள் செரிமான அமைப்பு துண்டப்படும். கூடுதலாக மலச்சிக்கல் இல்லாமல் மலமிளக்கியாகவும் செயல்படும்.
  • வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். நீங்கள் குடிக்கும் எலுமிச்சை நீர் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்க செய்யும்.
  • தினமும் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம். எலுமிச்சை ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யும்.
  • எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் கொண்டுள்ளது. இது பக்கவாதத்துக்கு எதிராக மிதமான பாதுகாப்பை வழங்குகிறது.