இன்றைய சூழ்நிலையில் மனிதன் நவீனம் என்ற பெயரில் உடல்பருமன், சிறுவயதிலே கண் குறைப்பாடு, இளநரை, சொத்தைப்பல், நீரிழிவு நோய் என நோய்கள் வருகிறது.
நம் முன்னோர்கள் உணவை மருந்தாக பயன்படுத்தினர். ஆனால் நாம் மருந்தைத்தான் உணவாக பயன்படுத்துகிறோம்.
இந்த நிலையை முழுமையாக மாற்ற தற்போது இயலவில்லை என்றாலும் அதற்கான முயற்சியை செய்தால் தான் நம் அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக அமையும்.
அந்த வகையில் நம் தமிழர்கள் பயன்படுத்திய உணவு மருந்துகளில் ஒன்று “நெல்லிக்காய்” நெல்லிக்காய்க்கும், தமிழர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை பலவழிகளில் அறியலாம்.
தினசரி நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர்.
உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை விளையும் இடங்களில் கிடைக்கும்.
நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.
இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் சி சத்து சருமத்திற்கு இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்று நோய்கள் ஏற்படாமலும் காக்கிறது.
உடலில் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பு இதயம். இதயத்தின் செயல்பாடுகள் எப்போதும் சீராக இருக்கின்ற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதிலுள்ள புளிப்பு தன்மை கொண்ட ரசாயனங்கள், இதயத்தில் ரத்தம் உறைதல், அடைப்பு போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது.
மேலும், நெல்லிக்காயில் இருக்கின்ற குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலேரோசிஸ் எனப்படும் இதயம் சம்பந்தமான பாதிப்புகள் உண்டாகாமல் தடுக்கிறது.
உடலில் ஓடும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வடிகட்டி வெளியேற்றுவது சிறுநீரகங்கள். ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்கனி இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாற்றிற்க்கு சிறுநீரகங்களில் படிகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதை தடுத்து, அவைகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள். நெல்லிக்காய்களில் பல வகையான வைட்டமின் சத்துகள் உள்ளன. குறிப்பாக நெல்லிக்காயில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளது.
கல்லீரலில் ஏற்படும் கிருமி தொற்றால் ஏற்படும் ஒரு நோய் மஞ்சள் காமாலை. இந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து நெல்லிக்கனிகளை உண்பதால் ஈரலில் இருக்கும் கிருமிகள் அழிந்து மஞ்சள் காமாலை குணமாகும்.
இத்தனை பயன்களை தருவதினால் தினமும் ஒன்று என சாப்பிட்டுவர நம்மை எந்த நோய் தொற்றும் அண்டாமல் ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ளலாம்.