அந்த காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள் தான். உணவே உண்ணாமல் வாழ்ந்து காட்டி சாதித்தவர்கள். இவர்களால் மட்டும் இது எப்படி முடிந்தது என நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாது.
இது எப்படி சாத்தியம்? பொதுவாக உமிழ்நீர் என்பது கன்னம், தாடை மற்றும் வாய் போன்ற பகுதிகளில் சுரக்கிறது. ஆனால் இது அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது பிட்யூட்டரி சுரப்பி ஆகும்.
இந்த நீரை ‘காயப்பால்’ என அழைத்தனர். எச்சிலுக்கு இவ்வளவு மௌசா என நினைக்கிறீர்களா… உமிழ்நீர் எச்சிலைக் காட்டிலும் வேறுபட்டது. எச்சிலில் ஒரு வித துர்நாற்றம் வீசும்.
ஆனால் உமிழ்நீரில் எந்த ஒரு வாசனையும் வராது. உணவை உண்ணும் போது அதனை நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிட வேண்டும் என பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.
உமிழ்நீரில் ஸ்டார்ச் உள்ளது. செடிகள் மற்றும் மரங்கள் இந்த ஸ்டார்ச் கொண்டு தான் தங்களுக்கு தேவையான உணவை தாமே தயாரித்து கொள்கின்றன. இதனை செய்வதற்கு சூரிய ஒளி மற்றும் தண்ணீர் இருந்தால் போதும்.
சித்தர்களும் இந்த டிரிக்கை தான் பின்பற்றி உள்ளனர். ப்ராணாயாமம் செய்து வந்தால் உடலில் அதிகப்படியான உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடலானது சூரிய ஒளியோடு கலந்து உடலுக்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்து விடும்.
இந்த டெக்னிக் கொண்டு தான் சித்தர்கள் உணவே உண்ணாமல் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்துள்ளனர். எனவே உமிழ்நீர் என்பது ஒருவரை இறவாமல் காக்கும் அமிர்தமாக பார்க்கப்படுகிறது.
உமிழ்நீர் பல விதமான நோய்களுக்கு மருந்தாக அமையும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா, ஆம், உண்மை தான். வாய் துர்நாற்றம் முதல் உள் உறுப்புகளுக்கு ஏற்படும் பிரச்சினை வரை போக்கக்கூடிய வல்லமை உமிழ்நீருக்கு உண்டு.
ஒரு சில நேரங்களில் வாய் கசப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும். இந்த மாதிரியான நேரத்தில் சமைத்த உணவுகளை தவிர்த்து பழங்களை சாப்பிடுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் அடுத்த வேலை உணவு உண்ணும் போது அந்த கசப்பு சுவை தானாகவே மாறி விடும்.
உமிழ்நீரானது காரத்தன்மை கொண்டது. இதில் அதிக என்சைம்கள் உள்ளது. மேலும் ஆன்டிபயாடிக்கள் அதிக அளவில் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரு மனிதனுக்கு சராசரியாக 1500 ml அளவு உமிழ்நீர் சுரக்கிறது. இந்த அளவானது நாம் உண்ணும் உணவு மற்றும் நம் எண்ணத்தை பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும்.
“நொறுங்க தின்றால் நூறு வயது” என்ற பழமொழிக்கு ஏற்ப உணவை நன்றாக மென்று கூழாக்கி தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் அது உமிழ்நீரோடு கலந்து உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். அதே போல் தண்ணீரையும் கொஞ்சம் கொஞ்சமாக வாய் வைத்து தான் பருக வேண்டும்.
இத்தனை நன்மை கொண்ட உமிழ்நீரையா வெளியே துப்பினோம் என நினைக்கிறீர்களா…. இனியாவது உமிழ்நீரை வெளியே தூப்பாதீர்கள். நம் உடலில் உற்பத்தி ஆகும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை இப்போதாவது புரிந்து கொண்டு வாழுங்கள்.