நமது அன்றாட சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் வெங்காயம் பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் காய்கறியாக பயிரிப்படுகிறது.
சிறிய வெங்காயம் மற்றும் பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் இரண்டுமே ஒரே குண நலன்களை கொண்டுள்ளன.
வெங்காயத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய், கந்தகம் கலந்துள்ளது. அல்லிசின் (நுண்ணுயிர் எதிர்ப்புத்தன்மை கொண்டது) அல்லீன் ஆகியவை உள்ளன. இவை காற்றில் பரவி வெங்காயத்தை உரிக்கும் பொழுதும் நறுக்கும் பொழுதும் கண்களில் நீரை வரவழைக்கின்றன.
மேலும், ஃபிளேவனாய்டுகள், பினோலிக் அமிலம் மற்றும் ஸ்டிரால்கள் போன்றவை காணப்படுகின்றன. இதனை உணவில் சேர்த்து கொள்ளுவதால் ஏற்படும் நன்மை குறித்து இனி பார்க்கலாம்.
- வெங்காயத்தில் பல வித மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இது கிருமிகளுக்கு எதிரானது.
- இதயநோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் ( சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க உதவுகிறது.
- வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். சளி, இருமலை போக்குகிறது. மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது.
- பல நூறு ஆண்டுகளாகவே வெங்காயம் பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.
- வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
- காதுவலிக்கு வெங்காயச் சாற்றினை லேசாக சூடு செய்து விடும்போது வலி கட்டுப்படுகிறது. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
- நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். மாதவிடாய் பிரச்சினை உள்ளவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் சீராகிறது.
- இது தலைமுடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
- பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்ன வேண்டும். இதனால் விஷம் இறங்கும். தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
- வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் சென்று கிகிச்சை பெறலாம்.
- சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
- தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.