2021இல் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு வரி விதிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறுகிறார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தைத்த ஆடைகளுக்கு சிறப்பு வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் ஆடை வர்த்தகர்களைப் பாதுகாத்தல், தரமற்ற ஆடைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளது.
வரி முறையை 200 ரூபாயிலிருந்து 450 ரூபாயாக உயர்த்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறினார்.