நம்மில் நிறைய பேருக்கு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கிறது.
இப்படி சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நமக்கு சில செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
இரவு நேரங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
அப்படி நாம் சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்க கூடாத முக்கிய உணவு பொருள் வேர்க்கடலை.
வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
உயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உணவியல் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உயர்ந்த கார்போ சத்து கொண்ட பருப்பு வகைகளுக்கு மாற்றாக வேர்கடலையை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் சாதாரண வெண்ணெய்க்கு மாற்றாக வேர்க்கடலை வெண்ணெய்யை பயன்படுத்தலாம்.
வேர்க்கடலை அந்த அளவிற்கு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது.
எனினும் வேர்க்கடலையில் அதிகளவு எண்ணெய் சத்து உள்ளது. எனவே நீங்கள் வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் குடலில் இரத்த குழாய்களில் கொழுப்புகள் படிய வாய்ப்புள்ளதாம்.
மேலும் இருமல், தொண்டையில் எரிச்சல் உண்டாகுமாம். எனவே இவற்றை உண்ட பிறகும் தண்ணீர் குடிப்பது வயிற்றின் pH அளவை பாதித்து சீரணமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். இனி இந்த தவறை யாரும் செய்ய வேண்டாம்.