கண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
தேங்காமல் காரியம் நடக்க சிறந்த பரிகாரம் எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் அர்ச்சனைக்கு என்று எடுத்துச் செல்வது தேங்காய் தான். நாம் செய்யக் கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக் கூடியது ‘தேங்காய்’ என்று சொல்வார்கள்.
கண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
தெய்வங்கள் திருவீதி உலா வரும்பொழுது, அவை நகர்வலம் முடிந்து கோவிலினுள் மீண்டும் செல்லும் போது தேங்காயை எடுத்துத் தெய்வச் சிலைகளைச் சுற்றி தேங்காயை வீதியில் உடைப்பார்கள்.
மூன்று கண்களை உடையதாக இருப்பதால் தான் இதனை முக்கண்ணரின் அம்சம் எனவும், முழுமுதற்கடவுள் விநாயகரின் அம்சம் எனவும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.