நுரையீரல் சுத்தமாக இந்த பொருளை தினமும் சாப்பிடுங்கள்

இந்தியர்கள் வெங்காயம் இன்றி சமைக்கவே மாட்டார்கள். மருத்துவ ரீதியாக இந்த வெங்காயம் நம்மில் ஏற்படும் பலவித பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறது.

உடலை சீர்படுத்தும் குணம் கொண்ட வெங்காயத்தில் நமக்கு தெரியாத பல நன்மைகள் மறைந்து இருக்கிறது. பழைய கால மனிதர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ ஓர் காரணம் அவர்கள் சாப்பிட்ட உணவு வகைகளில் ஒன்று தான் வெங்காயம்.

வெங்காயமானது அதில் உள்ள காரத்தன்மையினால் அனைவரையும் அழ வைப்பதால், இதனை செல்லமாக மாமியார் என்றும் அழைப்பார்கள். இப்படி வெங்காயத்தின் காரத்தன்மைக்கு முக்கிய காரணம், அதில் உள்ள அலைல் புரோப்பைல்-டை-சல்ஃபைடு என்ற எண்ணெய் தான். இந்த எண்ணெய் தான் வெங்காயத்தை உரிக்கும் போது, திரவத்தை சுரந்து, காற்றின் மூலம் கண்களில் பட்டு கண்ணீர் வர வைக்கிறது.

வெங்காயம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளப்படுகிறது. வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் தாது பலமாகும். வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

சர்க்கரை நோய், ஆஸ்துமா, சரும மற்றும் முடி ஆரோக்கியம் மட்டுமின்றி சிலவகை புற்றுநோய்களை கூட வெங்காயம் தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் வெங்காயம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதல்ல என்று சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நுரையீரல் சுத்தமாக

புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

மூட்டு வலி

வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

வாதநோய்

வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

நீர்க்கடுப்பு

தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

பித்தம்

4-5 வெங்காயத்தை தோலுரித்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள பித்தம் குறையும். மேலும் பித்த ஏப்பமும் மறையும்.

காது இரைச்சல்

வெங்காயச் சாறு மற்றும் கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி வெதுவெதுப்பான சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்

மூலக்கோளாறு

வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத்தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து கலந்து, சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.