இலங்கையில் மறைந்துபோகும் தமிழ் மொழி! கவலை வெளியிட்ட சமூக ஆர்வலர்கள்

இலங்கையில் உள்ள மும்மொழிகள் சிறப்புற்று நிகழும் இக்காலத்தில் தமிழ் மொழியை தனித்தேவைக்கு தவிர்த்து கொண்டாலும் காலப்போக்கில் சொந்த மொழி மெல்ல மெல்ல சிதைவடைந்து சீன மொழி முதன்மையாகி நிற்க சகமொழிகள் அடிமையாகும் காலமும் வரலாம் என சமூக ஆர்வலர் கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் தமிழர்கள் வாமும் பகுதியில் உள்ள பெயர் பலகை ஒன்றில் முதல் மொழியாக சிங்களமும், இரண்டாவது மொழியாக ஆங்கிலமும், மூன்றாவது மொழியாக சீன மொழியும் எழுதப்பட்டுள்ளது.

குறித்த பெயர்பலகையில் தமிழ் மொழி இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது.

இந்நிலையில் பொதுவுடமை நலன் கொண்டு அந்தந்த மொழியாளர்கள் விழிக்காவிடீல் மொழியை தொலைத்த நாட்டில் இலங்கையும் இடம்பிடிக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.