கண்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி என்று பாருங்க!

உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் வெளிக்காட்டும் கண்ணாடி நமது கண்கள். கண்ணுக்கு மை அழகு என்பது உண்மையல்ல. சோர்வு இல்லாமல் இருப்பதே கண்ணுக்கு அழகு.

களையிழந்த கண்கள் முகத்தின் அழகையும் களையிழக்கவே செய்யும். சருமத்தை அழகாக்க மேக்கப் சாதனங்கள் உதவும் ஆனால் களையிழந்த கண்களுக்கு என்ன மேக்கப் போட்டாலும் உரிய பராமரிப்பின்றி உயிர்ப்பை பெற முடியாது.

கண்களை பாதுகாக்க

தாமரை, ரோஜாப்பூ, தாழம்பூ இதில் எதாவது ஒரு மலரை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றி கொண்டால் கண்கள் இளமையாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.
கற்றாழை ஜெல்லுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கருவளையம் மீது தடவி சிறிது நேரம் கழித்து கண்ணை குளிர்ந்த நீரினால் கழுவினால் கருவளையம் மறையும்.

ஐலைனரை கண்களில் எப்படி போட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்

  • உங்களுக்கு சிறிய கண்கள் இருந்தால், மெல்லிய ஐலைனரைப் பயன்படுத்துங்கள். நீங்கள் கனமான கண் லைனரைப் பயன்படுத்தினால், உங்கள் கண்கள் சிறியதாக இருக்கும்.
  • கருப்புக்கு பதிலாக வெள்ளை மஸ்காரா பென்சில் பயன்படுத்தவும். இதைச் செய்வதால் உங்கள் கண்கள் அழகாகவும் பெரியதாகவும் இருக்கும்.
  • உங்களிடம் சிறிய கண்கள் இருந்தால், கண் ஒப்பனைக்கு ஒளி நிழல்களின் ஐ ஷேடோவைப் பயன்படுத்தவும். இருண்ட வண்ண ஐ ஷேடோவைப் பயன்படுத்துவதால் உங்கள் கண்கள் சிறியதாக இருக்கும்.
  • இமை முடிக்கு மேல் ஸ்காட்ச் டேப் போட்டு ஒட்டிவிட்டு அதன் மேல் ஐ லைனர் பயன்படுத்தினாலும், வில் போன்ற வடிவில் வரைய ஏதுவாக இருக்கும்.
  • பென்சில் வடிவிலான ஐ லைனரை பயன்படுத்துவது சுலபம். முதன் முறையாக உபயோகிப்பவர்களுக்கு இந்த பென்சில் ஐ லைனர் உதவியாக இருக்கும். ஆனால் ஜெல் அல்லது நீர் தன்மையில் இருக்கும் ஐ லைனர் போன்று இந்த பென்சில் ஐ லைனரில் அடர்த்தியாக வில் போன்ற வடிவில் போட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
  • பென்சில் ஐ லைனர் வைத்து ஒரு கோடு வரைந்துக் கொண்டு, பின்னர் ஐ லைனரால் இழுத்தால் நெளியாமல் ஒரே வளைவாக வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.
  • ஐ லைனர் போடும்போது களைந்துவிட்டால் துடைக்க கையில் பஞ்சு வைத்துக் கொள்வது நல்லது. களைந்த உடனே அழித்தால் மேக்கப் கலையாமல் அழித்து விடலாம்.