சென்னையில் மகனைக் கொன்று தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் செல்போன் கடையில் ஊர்மில் டோலியா என்பவர் மனேஜராக பணியாற்றி வருகிறார். நேற்று கடையின் ஊழியர்களை சீக்கிரம் கடையை அடைத்துவிட்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார்.
தனது மகன் மாதவ் டோலியாவை ஷாப்பிங் அழைத்து செல்லுவதாகக் கூறி அழைத்து வந்துள்ளார். பின்னர் தான் பணியாற்றி வந்த செல்போன் கடையை தன்னிடம் உள்ள சாவியால் திறந்து மகனை கழிவறைக்கு அழைத்து சென்று கூர்மையான ஆயுதத்தால் மகனின் கை மணிகட்டினை அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தச் சிறுவன், காப்பாற்ற யாரும் இல்லாமல் துடிதுடித்து இறந்து விட்டான். பின்னார் தனது கையின் மணிகட்டின் பின்புறம் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நீண்ட நேரமாக தனது மகன் மற்றும் கணவன் ஆகிய இருவரையும் காணவில்லை என்பதால், அவரது மனைவி கலைச்செல்வி கனவர் வேலை செய்யும் அலுவலக ஊழியர்களுக்கு தொடர்புக் கொண்டு கடைக்குச் சென்று பார்க்க சொல்லியுள்ளார். கடையை திறந்து பார்த்தபோது இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
உடனே அவர்கள் இருவரையும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது சிறுவன் மாதவ் டோலியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊர்மில் டோலியா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடபழனி போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.