இளையதளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் இன் வீடுதொடர்பான தகவல்கள் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்.
பத்து வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீடு சென்னை சாலிக்கிராமத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு அந்த வீட்டை நடிகர் விஜய் ஆண்டனிக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு, அடையாரில் அம்மா, அப்பாவுடன் குடியேறினார். பிறகு குழந்தைகள் பிறந்தவுடன் தனிக்குடித்தனம் போக முடிவெடுத்து, நீலாங்கரையில் வீடு கட்டி அங்கு குடியேறினார்.
ரொம்ப நாள் அதே வீட்டில் வசித்து வந்த நிலையில், மீண்டும் பனையூரில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி அங்கு குடியேறினார். நீலாங்கரை வீடு வாஸ்து சரியில்லையா? என்னான்னு தெரியல, 2018 ஆம் ஆண்டு வாக்கில் நீலாங்கரை வீட்டை இடித்துவிட்டு, அங்கு புதிய வீடு கட்ட ஆரம்பித்தார்.
பிரபல அமெரிக்க ஹாலிவுட் நடிகரான டாம் குரூஸ் பீச் ஹவுஸ் போல கட்டத்திட்டமிடப்பட்டு, அதே பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்க செலவிடப்பட்ட தொகையை கேட்டால் தலையே சுத்தும். சுமார் 140 கோடி ஆயிருக்காம்.
ஏற்கனவே பனையூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட வீடு, விஜய் இரசிகர் மண்டல தலைமை அலுவலகமாக செயல்படுகிறதாம். ஆகமொத்தம் சென்னை முழுக்க, விஜய் பெயரில் அசையா சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.