ஏழைகளின் வரமான இந்த கீரையை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை.

இலையில் நிறைய கால்சியமும், புரதமும் உள்ளது. அரிசி சோறு உண்பவர்களுக்கு, முருங்கைத் தழை ஏற்ற கீரையாகும். அரிசியில் இல்லாச் சத்துக்களை முருங்கைக் கீரை ஈடு செய்து விடும் மற்றும் நினைத்த சமயம் கீரையைப் பறித்து சமையல் செய்திடலாம்.

அதன் காரணமாகவே, “ஒரு முருங்கையும் ஒரு எருமையும் உண்டானால், வருகிற விருந்துக்கு மனம் களிக்க செய்வேன்.” என்ற பழமொழி கூறப்படுகிறது. கறவை மாடுகளில் இத்தழை நன்கு பாலூறப் செய்யும்.

தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பலைக்கழகம் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் .கற்பகத் தரு என்றே அழைக்கின்றனர். முரி எனும் சொல் ஒடிதல், கெடுதல் எனப் பொருள்படும். முருங்கு என்னும் சொல் முரி என்னும் சொல்லொடு தொடர்புள்ளது. முருங்குவது, அதாவது எளிதில் ஒடியக் கூடிய கிளைகளை கொண்டதே முருங்கை மரம் ஆகும். முருங்கையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை உள்ளன. இது நமது ஊரில் அதிகளவில் நிறைந்துள்ள ஒரு மரம்.

முருங்கை கீரையில் வைட்டமின் சி, ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. முருங்கை இலையின் பொடியானது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

முருங்கைக் கீரையின் பயன்கள் பற்றி பார்ப்போம்

  • மெலிந்த உடல் உடையவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் தேறி வரும், வலுப்பெறும்.
  • இலையை அரைத்து அதன் சாறு குடித்தால் தீர விக்கல் நீங்கும்.
  • முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.
  • இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை உடையது.
  • சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.
  • இலையின் சாருடன் தேன் கலந்து இமையில் தடவி வர கண் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
  • தாய் பால் அதிகரிக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் முருங்கையை உணவில் சேர்க்க வேண்டும்.
  • வயிற்று புண், அஜிரண கோளாறு மற்றும் மல சிக்கல் போன்ற வாயிரு சம்மந்த பட்ட வியாதிகள் தீரும்.
  • உடல் சூடு நீங்கி வர, பித்தம் குறையும்.
  • முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.
  • முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும், நினைவாற்றல் அதிகரிக்கும்.