இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 600ற்கும் அதிகமான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மகப்பேறியல் மற்றும் மகப்பேறு நிபுணர் வைத்தியர் டொக்டர் மதுரம்மான தேவோலகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கர்ப்பிணித் தாய்மார் இந்த வைரஸிடமிருந்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மாதாந்த பரிசோதனைகளுக்கு செல்வது தொடர்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அச்சம் காணப்படுகின்ற போதிலும், கட்டாயம் பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும்.

கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கும், கொவிட் தொற்று ஏற்படாதவர்களுக்கும் இடையில் தொடர்புகளை பேணாத வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.