இந்த பொருளை பயன்படுத்தி வந்தால் மிக விரைவில் உடல் எடை குறையும்

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.

உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரியாணி, குருமா போன்ற உணவு வகைகளில் உபயோகிக்கும் இந்த மரப்பட்டையை சின்னமான் (Cinnamon) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பல பகுதிகளில் விளைகிறது.

சரியான அளவில் அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை மறதி நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிறு வலி என அனைத்திற்கும் நிவாரணம் தரும்.

இலவங்கப் பட்டையில் இயற்கையிலேயே ஆன்டி-பாக்டீரியா இருக்கிறது. மேலும், இலவங்கத்தில் உடல் நலத்திற்கு தேவையான அளவு, மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் முக்கியமான தாது உப்புக்கள் உள்ளது.

வயிற்றுப்புண்

இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப் பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும். நமது அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலாவில் இலவங்கப் பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

அஜீரணக் கோளாறு

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத் தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும்.

விஷக்கடி

விஷக்கடி, சிலந்திக்கடி ,விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும். சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும்.

சருமத்துக்கு ஊட்டச்சத்து

பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைத் தன்னிடம் கொண்டுள்ள லவங்கப் பட்டை, சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள நிற வேறுபாடுகளைக் களைந்து சீரான சரும நிறத்தையும் வழங்குகிறது. கட்டிகள், பருக்கள், கொப்பளங்கள் போன்றவற்றிற்கு தகுந்த சிகிச்சையைத் தர உதவுகிறது லவங்கப் பட்டை. ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை தந்து உதவுகிறது. எரிச்சலடைந்த சருமத்திற்கு இதமான உணர்வைத் தருகிறது. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளைப் போக்க உதவுகிறது.

சளி தொல்லை

பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பட்டை சேர்த்து கொதிக்க வைத்து அந்த ஆவியை முகர்ந்து வந்தால் சளி, இருமல் தொல்லை குணமாகும். அத்தோடு, வெது வெதுப்பான நீரில் பட்டையுடன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவை குணமாகும்.

உடல் எடை

பட்டையை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி

பட்டையில் பாலிஃபினால் மற்றும் ப்ரோஅந்தோசையனிடின் இருப்பதால் இருதய நோய்கள் போன்றவை குணமாகும்.மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மை இருக்கிறது.

மாதவிடாய் வலி

காலையில் தினமும் பட்டை சேர்க்கப்பட்ட தண்ணீரை குடித்து வந்தால் மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும். உணவில் தொடர்ச்சியாக பட்டை எடுத்து கொண்ட பெண்களை காட்டிலும் பட்டை சேர்த்து கொள்ளாதவர்களுக்கு வலி அதிகமாக இருப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.