இலங்கையின் முக்கிய அமைச்சர் திடீர் இராஜினாமா?

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, த லீடர் செய்தி வெளியிட்டுள்ளது.

இராஜினாமா கடிதத்தை இன்று காலை ஜனாதிபதியிடம், நீதி அமைச்சர் கையளித்துள்ளார்.

எனினும், நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது