முதல் முறையாக மரக்கட்டையினாலான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ள ஜப்பான்

விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல் முறையாக மரக்கட்டைகளைக் கொண்டு செயற்கைக்கோள்களை ஜப்பான் தயாரிக்கவுள்ளது.

Sumitomo Forestry எனும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து வரும் 2023-ஆம் ஆண்டளவில் மரத்தினால் செய்யப்பட முதல் செயற்கைக்கோளை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பூமியைச் சுற்றி அதன் சுற்றுவட்டப் பாதையில் ஸ்பேஸ் ஜங்க் என சொல்லக்கூடிய லட்சக்கணக்கான விண்வெளிக் கழிவுகள் வலம் வருகின்றன. அவை அனைத்தும் பல ஆராய்ச்சிக்களுக்காக விண்வெளிக்கு அனுப்பட்ட செயற்கைக்கோள்களின் பயனற்ற பாகங்களும், கழிவுகளாக இருக்கின்றன.

இவை இப்போது தேவையற்றக் குப்பைகளாக விண்வெளியில் சுற்றிவருவதுடன், புதிதாக அனுப்பப்படும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு விளைவிக்கக்கூடியதாக மாறிவருகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASAவின் கூற்றுப்படி, 500,000 க்கும் மேற்பட்ட குப்பைகள் அல்லது விண்வெளி குப்பைகள் மணிக்கு 28 கிமீ வேகத்தில் நமது பூமியைச் சுற்றி வருகிறது.

இப்போது தயாரிக்கப்படவுள்ள இந்த செயற்கைக்கோள்கலில் பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் கடுமையான வெப்ப மார்ரகளுக்கும், சூரிய ஒளிக்கும் தாக்குப்பிடிக்கக்கூடியதாக இருக்கும் என பல்கலைக்கழகம் கூறுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்படும் மரத்தாலான செயற்கைக்கோள்கள் பூமியில் திரும்பி விழுவதற்கு முன்னதாக வரும் வழியிலேயே முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிடும் வகையில் இருக்கவேண்டும் என Sumitomo Forestry நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்காக எந்த வகையான மரத்தினை பயன்படுத்த உள்ளனர் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.