கை கால் முழங்கையில் ஏற்படும் கருமையை ஒரே வாரத்தில் போக்க வேண்டுமா? எளிய வழிமுறை

பொதுவாக நிறைய பேருக்கு உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும்.

இதற்கு காரணம் அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான்.

ஆனால், இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.

* மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.

* கடலை மாவு மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் சோப்பு பயன்படுத்தி கழுவினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* 1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

* தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.

* 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும்.

இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.

* தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.

* வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சரும கருமையைப் போக்க வல்லது. இத்தகைய வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முழங்கை கருமை மாயமாகும்.

* கடுகு எண்ணெய் ஒரு ஆன்டி-செப்டிக் பொருள். இதை முழங்கையில் தினமும் தடவி வந்தால், முழங்கை மேலும் கருமையாவதைத் தடுக்கலாம்.

அதுவும் கடுகு எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.

* பப்பாளியை மசித்து முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முழங்கை கருமை மறைந்து, வெள்ளையாகும்.