பழங்கள் மற்றும் காய்கறிகள் என பலவகை உணவுகளை கொடுக்கும் காலம் குளிர்காலம் என்று சொல்லலாம்.
குளிர்கால காய்கறிகளில் முள்ளங்கி முக்கியமானது. இது நீர்ச்சத்து நிறைந்த நன்றாக சாப்பிட கூடிய வேர் காய்கறியாகும்.
முள்ளங்கி சமையலுக்கு பயன்படுவதையும் தாண்டி பல மருத்துவ நோக்கங்களையும் கொண்டுள்ளது.அதனால் இதை ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம்.
முள்ளங்கியில் ஏராளமான எண்ணெய் கலவைகள் உள்ளன. முள்ளங்கியை சமைத்தோ, பச்சையாகவோ அல்லது ஊறுகாயாக துவையலாக செய்தும் சாப்பிடலாம்.
இந்த முள்ளங்கி ஏன் குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். தெரிந்துகொள்வோமா?
- முள்ளங்கியில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் ரசாயன கலவைகள் உள்ளன.
- எனவே முள்ளங்கியை சாப்பிடுவதால் உங்கள் உடலின் இயற்கையான அடிபோனெக்டிக் (புரத ஹார்மோன்) உற்பத்தியையும் இது மேம்படுத்துகிறது.
இந்த ஹார்மோனானது அதிக அளவு இன்சுலினால் ஏற்படும் எதிர்ப்பில் இருந்து பாதுக்காக்க உதவுகிறது. - முள்ளங்கியில் நீரிழிவு உருவாவதை தடுக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற ஆற்றலும் உள்ளது. அதனால் முள்ளங்கியை தவிர்க்காமல் அதிகமாகவே பயன்படுத்துங்கள்.
- உடலில் கல்லீரல் சருமத்துக்கு அடுத்து மிகப்பெரிய உறுப்பு. உடலில் நோய்த்தொற்று ஏற்படும் போது தானாகவே அதை சரிசெய்து கொள்ளும் குணம் இந்த கல்லீரலுக்கு உண்டு.
- முள்ளங்கியில் கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுக்காக்கும் கலவைகள் உள்ளன. மேலும் இந்த கலவைகள் சிறுநீரகங்களில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற உதவுகின்றன.
- முள்ளங்கி அதிக நார்ச்சத்து கொண்ட உணவாக உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான அமைப்பை தூண்டும் உணவாக இது உள்ளது. மேலும் இது உடலில் உள்ள உணவு கழிவுகளை மலத்துளையை நோக்கி நகர்த்துகிறது.
- இதனால் மலச்சிக்கலை இது சரி செய்கிறது. இதை தவிர முள்ளங்கி பித்த சுரப்பையையும் ஒழுங்குப்படுத்துகிறது. மேலும் இது கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தையும் பாதுக்காக்கிறது.