இன்னொரு புதிய வைரஸ்… மனிதகுலத்திற்கு ஆபத்து: எபோலாவைக் கண்டறிந்த மருத்துவர் எச்சரிக்கை

இன்னொரு புதிய தொற்று மனிதகுலத்திற்கு ஆபத்தை விழைவிக்க இருப்பதாக எபோலா கிருமியை கண்டறிந்த மருத்துவர் எச்சரித்துள்ளார்.

1976-ல் எபோலா தொற்றை கண்டறிந்த மருத்துவர் Jean-Jacques Muyembe Tamfum மனிதகுலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்ள இருக்கிறது என்றார்.

மட்டுமின்றி, ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து புதிய மற்றும் அபாயகரமான வைரஸ்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது மனிதகுலத்திற்கு மொத்தமாக பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர்,

கொரோனா பெருந்தொற்றை விடவும் அது அபாயகரமானது, மிக விரைவில் பரவக்கூடியது என சுட்டிக்காட்டியுள்ளார்.

விசித்திரமான அறிகுறிகளுடன் காங்கோ நாட்டில் ஒரு நோயாளியை கண்டறியப்பட்டுள்ளதாகவும், முதலில் அவருக்கு எபோலா பாதிப்பு என கருதி பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு எபோலா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும்,

மருத்துவ உலகம் அஞ்சுவது போன்று, அந்த நோயாளி பாதிக்கப்பட்டுள்ளது, அடுத்த அபாயகரமான தொற்றாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

காங்கோ நோயாளி பாதிக்கப்பட்டுள்ளது பெயரிடப்படாத அந்த அபாயகரமான தொற்றாக இருக்கலாம் என்பது ஒரு அனுமானம் மட்டுமே என்றாலும்,

அது நிகழ்ந்தால் அது உலகம் முழுவதும் அழிவுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள்.