புத்தளம் பகுதியில் இறந்த முஸ்லிம் வீட்டில் இராணுவத்தினரின் பலரும் பாராட்டும் செயல்

புத்தளம், கல்பிட்டி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கரம்பை ஹுசைனியாபுரம் பகுதியில் வசித்த முகமட் ஸாலிஹு சித்தி சுபைரா என்பவர் மாரடைப்பினால் மரணமடைந்து இன்று நல்லடக்கம் செய்யப்படவிருந்த நிலையில்,

அன்னாரின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து தற்போது நாடு திரும்பி முல்லைத்தீவு கேப்பாபிலவு இராணுவ முகாமில் தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலையில் இதனை அறிந்தவுடன் முல்லைத்தீவு இராணுவ தளபதியின் விஷேச பாதுகாப்பு வழிகாட்டலுடன் அழைத்து வரப்பட்டு மனைவியின் இறுதி கடமை பிரார்தனையில் கலந்துகொள்ளச் செய்துவிட்டு தொற்றுநீக்கம் செய்து மீண்டும் முல்லைத்திவு தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டது!!

இதற்குரிய பாதுகாப்பு ஏனைய ஒழுங்குகளை முல்லைத்தீவு இராணுவ பொறுப்பாளர் கிராம அலுவலருடன் கலந்துரையாடி கல்பிட்டி phi மற்றும் நுரைச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் ஒழுங்குபடுத்தி சிறப்பான முறையில் இதனை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் மேற்கொண்டமைக்காக குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

நாம் நினைப்பது போல பெரும்பான்மை இனத்தவர்களில் ஒரு சிலரே இனவாதமாக நடந்து கொள்கிறார்கள் இனம் மதம் மொழிகளுக்கப்பால் மனிதய நேயத்துடன் நடந்து கொள்ள கூடிய மக்களை கொண்ட நாடு என்பதில் இவர்களை போன்றவர்களால் பெருமிதம் அடையலாம்.