காதலித்து திருமணம் செய்து கொண்ட தங்கையின் கணவரை, அவரது அண்ணன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானாவை சேர்ந்தவர் நீரஜ், இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் வெவ்வெறு சாதி என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், எனினும் கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டனர்.
இருந்தாலும் இவர்களது திருமணம் மணப்பெண்ணின் அண்ணனுக்கு பிடிக்கவில்லையாம்,
அவர்களது எதிர்ப்புக்கு இடையே சமீபத்தில் நீரஜ்க்கும், லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பானிப்பட் மார்க்கெட் பகுதியில் நீரஜை அவரது மனைவியின் அண்ணன் சந்தித்தார்.
அப்போது நீரஜை அவர், கத்தியால் சரமாரியாக குத்தி, தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் விழுந்த நீரஜ், அதே இடத்தில் இறந்தார். போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.