சென்னை மெரீனா கடற்கரையில் இன்று கடல் அலைகளுடன் நுரை ஒதுங்கி வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரீனாவில் கடல் அலைகள் நுரையுடன் வந்ததைப் பார்த்து பொதுமக்களும். வியாபாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடற்கரைக்கு செல்லும் பெரும்பாலோர் அச்சப்பட்டு கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று கடல் அலையைப் பார்வையிட்டு செல்கின்றனர்.
இச்செய்தி அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியதால், ஏராளமானோர் கடற்கரைக்கு வந்து பார்வையிடுகின்றனர்.
மேலும் சென்னை கடற்கரையில் அலைகளுடன் நுரை வருவதால், மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இதற்கு காரணம் என்ன என்று ஆய்வு செய்து வருகின்றதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொரோனா தளர்வுக்கு பிறகு, கடந்த டிசம்பர் மாதம் தான் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பார்வைக்கு கடற்கரைக்கு செல்லலாம் என் சென்னை மாநகராட்சி அனுமதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.