ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள முன்னைய ஆவணத்தில் கையெழுத்திட்டவர்களை அதிலிருந்து விலகும்படியும், தீவிர நிலைப்பாடுடைய தமிழ் தரப்புக்களுடன் இணைந்த செயற்பட்டால் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கும் கடிதமொன்றை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எம்.ஏ.சுமந்திரன் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ள ஆவணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே பிளவான நிலைமை காணப்படுகிறது. 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே ஆவணமொன்றில் கையெழுத்திட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புதிய ஆவணமொன்றை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில்லேயே குறித்த எச்சரிக்கை கடித்தத்தை அவர் ஔப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்புக்கள் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டுமென, தமிழ் அமைப்புக்கள் பிரிந்து நின்று முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை ஐ.தே.க ஆதரவு அமைப்பான உலகத்தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட அமைப்புக்களினாலேயே இந்த விவகாரம் கையாளப்பட்டது.
இந் நிலையில், எம்.ஏ.சுமந்திரனுடன் அந்த அமைப்புக்கள் நெருங்கிச் செயற்பட்டது அதற்கு வாய்ப்பாக இருந்தது.
தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகள் மேலும் இரண்டு நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளதனால் உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்களின் பிடி தளர்ந்து விட்டது.
தற்போது பிரித்தானிய தமிழர் பேரவையினால் வரைபொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் கனடிய, அமெரிக்கவாலிலுள்ள தமிழர் அமைப்புக்களும் அதில் இணைந்திருந்தன.
இந்த வரைபை தாம் ஏற்றுக்கொள்வதாக மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், த.கலையரசன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம், த.சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் தவிர்ந்த மற்றைய அனைவரும் கையொப்பமிட்டுள்ளதாக வவுனியாவில் 3 கட்சிகளிற்கிடையிலான சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்னொரு வரைபை தயாரிக்க எம்.ஏ.சுமந்திரன் தீவிர முயற்சி செய்து வருவதுடன் , தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எச்சரிக்கை கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த கடிதத்தின் பிரதிகள், கையெழுத்திட்ட எம்.பிக்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.