இலங்கையில் இயங்கிவரும் மிகப்பெரிய ஆடைத்தொழிற்சாலைகளில் ஒன்றாகிய மாஸ் நிறுவனத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்த தகவலை அறிவித்துள்ளது.
இதற்கமைய கண்டி பள்ளேகலையில் உள்ள முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள தமது கிளை தொழிற்சாலையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 49 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறுகின்றது.
அதேபோல ஹங்வெல்ல, பாணந்துறை, துல்ஹிரிய உட்பட பல கிளைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ஏனைய ஊழியர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் முகாமை செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.