லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி வெளியே சென்ற தமிழ் குடும்பம் ஒன்று பொலிஸாரிடம் மாட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் வித்தித்துள்ளதுடன் மக்களை அதனை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் லண்டன் ஹரோவில்(Harrow) வசித்து வரும் தமிழ் குடும்பம் ஒன்று, நேற்றைய தினம்(06) மாலை 4 மணி அளவில் புறப்பட்டு தமது காரில் வெம்பிளி நோக்கி பயணித்துள்ளனர்.
இதன் போது எதிரில் வந்த பொலிஸ் கார் ஒன்று, சட்டென அவர்கள் காரை மறித்துள்ளது. அதில் இருந்து இறங்கி வந்தபொலிஸார், காரின் முன் ஆசனத்தில் இருந்த கணவன் மற்றும் மனைவியை தனித் தனியாக அழைத்துச் சென்று எங்கே செல்கிறீகள் என கேட்டுள்ளார்கள்.
மனைவி தாம் டெஸ்கோவுக்கு(TESCO) உணவு வாங்கச் செல்வதாகவும். கணவர் கொஸ்கோவுக்கு(COSTCO) கடைக்கான பொருட்களை வாங்கச் சொல்வதாகவும். கூறியுள்ளார்கள்.
இருவரும் வெவ்வேறு இடங்களுக்கு செல்வதாக கூறியதால் அவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என தெரிந்து கொண்ட பொலிசார், பின் ஆசனத்தில் இருந்த 2 பிள்ளைகளிடம் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டபோது அவர்கள் தெரியாது என கூறிவிட்டார்கள்.
இதனை அடுத்து அவர்களை எச்சரித்த பொலிசார், இம் முறை உங்களுக்கு நாம் £200 பவுண்டுகள் தண்டம் அறவிடவில்லை. தேவை இல்லாமல் வெளியே சென்று, அடுத்த முறை சிக்கினால் தண்டம் அறவிடப்படும் என கூறி சென்றதாக குறித்த குடும்பத்தலைவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் அரசாங்கம் வித்தித்துள்ள கட்டுப்பாடுகளை கவனத்தில் எடுத்து அநாவசியமாக வெளியே செல்வதை தவிருங்கள்.
இது நாம் கொடிய கொரோனாவில் இருந்து நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாத்துகொள்வதற்கு சிறந்த வழிமுறையாகும்.