கொலை வெறியோடு இத்தாலிக்கு தனது காதலியை தேடி வந்த பிரித்தானிய பணக்காரரை பொலிஸ் கைது செய்துள்ளது.
பிரித்தனியாவின் பிர்மிங்கம் நகரத்தைச் சேர்ந்த மில்லியனர் அஜாஸ் ஹுசைன் ஷா, தனது 165,000 டொலர் மதிப்புள்ள தங்க லம்போர்கினி ஹுராக்கன் காரை எடுத்துக்கொண்டு, இத்தாலியின் மிலான் நகருக்கு தனது 26 வயது காதலியை பார்க்க வந்துள்ளார்.
ஆனால், ஹுசைன் ஷாவின் காரை தனது வீட்டு பால்கனியிலிருந்து பார்த்த காதலி மகிழ்ச்சியடையாமல், மாறாக இத்தாலி பொலிஸுக்கு போன் செய்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுள்ளார். பின்னர் ரிமினி பகுதியில் இருக்கும் அவரது வீட்டுக்கு விரைந்து வந்த பொலிஸ் அவரை அங்கேயே கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அஜாஸ் ஹுசைன் ஷா தனது காதலியை அச்சுறுத்தவே கடல் கடந்து கொலைவெறியுடன் வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
ஹுசைன் ஷாவும் அவரது காதலியும் கடந்த 18 மாதங்களாக காதவிந்து வந்துள்ளனர். இருப்பினும், அந்த இடைப்பட்ட காலங்களில், ஹுசைன் ஷா எப்போதும் தனது காதலியை அடித்து துன்புறுத்துவது, கண்டபடி திட்டுவது, கத்தியால் கிழிப்பது, இரும்பால் சூடு வைப்பது என தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், அவர் எப்படியோ காதலனிடம் தப்பி தனது பெற்றோரின் வீட்டிற்கு ஓடிவந்துவிட்டார்.
அதன்பிறகும், ஹுசைன் ஷா காதலியை அழைத்து, அவரது பெற்றோரின் வீட்டையம், காரையும் எரித்துவிடுவேன் என்றும் உயிரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், திடீரென அவரது காரை பார்த்ததும் மிரண்டு போன காதலி உடனடியாக பொலிஸை வரவழைத்து தன்னை தற்காத்துக்கொண்டார்.
இத்தாலி பொலிஸார் ஹுசைன் ஷா மீது அச்சுறுத்தல் மற்றும் வன்முறையை கையாண்ட குற்றங்களின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அவருக்கு இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும். மேலும், இத்தாலியின் கோவிட் -19 பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காகவும் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்.
பிரித்தானியாவில் நிதி நிறுவனத்தை நிர்வகிக்கும் ஹுசைன் ஷா, 15 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ளார் மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் சொத்துக்களைக் கொண்டுள்ளார்.