இருமடங்கு வேகத்தில் உடல் எடையைக் குறைக்கணுமா? அதுக்கு இந்த கசாயத்தை குடிங்க போதும்

விதைகளிலேயே ஆளி விதை தான் மிகவும் ஆரோக்கியமானது. இவை விலை குறைவானது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் எளிதில் உணவுகளில் சேர்க்கக்கூடியதும் கூட.

இப்போது உடல் எடையை இருமடங்கு வேகத்தை குறைக்க உதவும் ஆளி விதை கசாயத்தை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

ஆளி விதைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு பகுதிகளில் தோன்றிய மிகவும் பழமையான விதைகளாகும். ஆளி விதைகளில் இரண்டு வகைகள் உள்ள. அவை பழுப்பு மற்றும் கோல்டன் நிற ஆளி விதைகள்.

இவை இரண்டுமே சமமான அளவில் சத்துக்களைக் கொண்டவை. இந்த விதைகளின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அறிந்த பின், இது மக்களிடையே பிரபலமானது.

ஆளி விதை கசாயம்

ஆளி விதைகளை பலவாறு சாப்பிடலாம். ஆனால் ஆளி விதைகளில் உள்ள முழு சத்துக்களையும் பெற வேண்டுமானால், அதை கசாயம் வடிவில் தான் உட்கொள்ள வேண்டும்.

இப்போது அந்த ஆளி விதை கசாயத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
  1. தண்ணீர் – 1 கப்
  2. ஆளி விதை பொடி – 1 டேபிள் ஸ்பூன்
  3. எலுமிச்சை – 1 டேபிள் ஸ்பூன்
  4. வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை
  • ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஆளி விதை பொடியை சேர்த்து அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்தால், ஆளி விதை கசாயம் தயார்.
  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், இந்த கசாயத்தை காலையில் எழுந்ததும் காபி, டீக்கு பதிலாக குடிக்க வேண்டும்.