தங்க காரில் 1000 மைல் கடந்து வந்த காதலனை பொலிஸாரிடம் மாட்டிவிட்ட காதலி!

பிரிட்டன் மல்டி மில்லியனர் ஒருவர் இத்தாலிக்கு ஆயிரம் மைல்கள் பயணம் செய்து தனது காதலியை தேடி வந்தபோது பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

பிரிட்டன் பர்மிங்காம் நகரை சேர்ந்த மல்டி மில்லியனர் Ajaz Hussain Shah, 36 என்பவர் 165 ஆயிரம் டாலர் மதிப்புள்ள தங்க லம்போர்கினி ஹீரோக்கன் காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய 26 வயது காதலியை இத்தாலியின் மிலான் நகருக்கு வந்து பார்ப்பதற்காக பயணப்பட்டு உள்ளார்.

எனினும் அவரது காரை, வீட்டு பால்கனியில் இருந்து பார்த்தவுடனேயே அவருடைய காதலி மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக இத்தாலி போலீசாருக்கு உடனடியாக போன் செய்து , Ajaz Hussain Shah-வை கைது செய்யுமாறும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவருடைய வீட்டுக்கு விரைந்து வந்த பொலிஸார் Ajaz Hussain Shah-வை கைது செய்தனர்.

இதனையடுத்து அவரிடம் விசாரணை ஆயிரம் மைல்கள் கடந்து இத்தாலியில் இருக்கும் தன்னுடைய காதலியை பார்ப்பதற்காக Ajaz Hussain Shah வந்துள்ள காரணம் தெரிய வந்தது.

கடந்த 18 மாதங்களாக Ajaz Hussain Shah மற்றும் அவருடைய காதலி இருவரும் காதலித்து வந்த நிலையில் இடைப்பட்ட காலங்களில் தன்னுடைய காதலியை அடித்து துன்புறுத்துவது, திட்டுவது, சூடு வைப்பது உள்ளிட்ட குடும்ப வன்முறைகளில் ஈடுபட்டு இருக்கிறார் Ajaz Hussain Shah.

இந்நிலையில் அவரிடமிருந்து தப்பித்து இத்தாலியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அவருடைய காதலி ஓடி வந்துள்ளார். அதற்குப் பிறகும் விடாத Ajaz Hussain Shah காதலியை போனில் அழைத்து, அவருடைய பெற்றோரின் வீட்டையும் காரையும் எரித்து விடுவேன் என்று எச்சரித்தும் மிரட்டியும் வந்துள்ளார்.

இந்த நிலையில்தான் Ajaz Hussain Shah-ன் காரை பார்த்ததும் மிரண்டு போன காதலி தன்னை தற்காத்துக் கொள்வதற்காக உடனடியாக பொலிஸாரை அழைத்து விவரத்தை சொல்லியுள்ளார்.

இதனையடுத்து இத்தாலி போலீசார் Ajaz Hussain Shah மீது அச்சுறுத்தல் மற்றும் வன்முறையை கையாண்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இத்தாலி நிறுவன பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக அவருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதேவேளை பிரிட்டனில் நிதி நிறுவனத்தை நிர்வகிக்கும் Ajaz Hussain Shah என்பவர் சுமார் 15 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் உட்பட சொத்துக்களை சொந்தமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.